முத்துவாப்பா

நீண்ட பகல்பொழுது.. படகு பேசிக்கொண்டிருக்கிறது.. காய்ந்த கரையுடன்!

Sunday, November 20, 2011

தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறது ஒரு விட்ஜெட் -வைபர்


அலைபேசி நிறுவனங்கள் நாளொரு ஸ்கீமும் பொழுதொரு ரேட்டுமாக வாடிக்கையாளர்களை வதக்கி தாளித்துக் கொண்டிருக்கையில் தகவல் உலகின் மறுபக்கத்தில் இவர்களின் இம்சையிலிருந்து விடுபட புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புக்களும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.

அந்த வரிசையில் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறது ஒரு விட்ஜெட் -வைபர்.

வைபர் ஸ்கைப் () போன்றதொரு அப்ளிகேஷன். ஆனால் இதில் சற்றே வித்தியாசமாக சில அம்சங்கள். இதர மெஸஞ்சர்களைப்போல மின்னஞ்சல் மற்றும் அரட்டை வசதிகள் இல்லை. மாறாக உங்கள் அலைப்பேசியிலிருந்து வைபர் மூலம் உலகின் எந்தப்பகுதியிலுமிருக்கும் வைபர் பயணாளியை அவருடைய அலைப்பேசிக்கே அழைக்கலாம்.

இது எப்படி சாத்தியமாகிறது?

வைபர் கணக்கு துவக்கும்போது நமது அலைபேசி எண்ணையே நமது ஐடியாக்கி கொள்கிறது. அதாவது உங்கள் வைபர் ஐடி உங்கள் செல்போன் நம்பர்தான். எனது ஐடி எனது செல்போன் நம்பரே. இதில் ஒரு அட்டகாசமான வசதி என்னவென்றால் நீங்கள் வைபரை உங்கள் செல்போனில் நேரடியாக பதிவிறக்கி நிறுவியதும் வைபர் உங்கள் ஃபோன்புக்கிலிருக்கும் நம்பர்களை ஸ்கேன் செய்து அதில் யார் யார் வைபர்கணக்கு வைத்திருக்கிறாகளோ அவற்றையெல்லாம் வைபர் என்ற லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறது. அடுத்த முறை நீங்கள் உங்கள் அலைபேசியில் ஒருவரை அழைக்க முயலும்போது அவர் வைபர் லிஸ்டில் இருந்தால் வைபர் அழைப்பா அல்லது நெட்வொர்க் அழைப்பா என்று ஆப்ஷன் தருகிறது.

பெரும்பாலான 'வாய்ப்' அக்கவுன்ட்கள் லோக்கல் அழைப்புகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே லோக்கல் கால்களுக்கு நெட்வொர்க்கையே பயண்படுத்துகிறோம். ஆனால் வைபர் மூலம் இந்த தடை லோக்கல் அழைப்புகளும் இலவசமே.

ஓக்கே..!

வைபர் பயண்படுத்த என்ன தேவை..?

- ஐபோன் அல்லது ஆன்ட்ராய்ட் இயக்கமுள்ள ஸ்மார்ட்ஃபோன். (விரைவில் சிம்பியன்(நோக்கியா) ஃபோன்களுக்கும் இந்த வசதி வர இருக்கிறது)

- வைஃபை இணைப்பு

-வைஃபை இனைப்பு இல்லாதவர்கள் டேட்டா சிம் எனப்படும் இன்டெர்நெட் இணைப்புக்கான சிம் கார்டை பயணபடுத்தலாம்.

- அலைபேசியில் வைபர் அப்ளிகேஷன்.

(சவுதியில் என்னிடம் இருப்பது எச்டிசி வைல்ட்ஃபையர் ஸ்மார்ட்ஃபோன். 30 ரியால் மதிப்பில் ஒரு மாதம் 1ஜிபி அளவுள்ள டேட்டா சிம். யாஹு,ஸ்கைப்,ஃப்ரிங் மற்றும் இதர நெட் பயண்பாடுகள் அணைத்தும். வைபர் துவக்கும்போது என்னிடம் இரண்டு காண்டாக்ட்கள் மட்டுமே இருந்தது. இப்போது இது 20 வரை அதிகரித்துள்ளது. வைபரை நம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு கட்டத்தில் எல்லா கான்டாக்ட்களும் வைபரில் இணைந்து விடும். இலவச வைஃபை இணைப்பு கிடைத்தால் முற்றிலும் தகவல் தொடர்பு இலவசமாகிவிடும்.)

அதில் அதிகபட்ச முதலீடு என்றால் ஸ்மார்ட்போன் மட்டுமே. ஆனால் இப்போது பத்தாயிரம் ரூபாய்களுக்கு உள்ளேயே நல்ல ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ஆனால் வைபரின் உலகலாவிய இலவச பயண்பாடு நமது தொலைபேசி கட்டணங்களில் நல்ல சேமிப்பை தருமல்லவா..?

என்ன நண்பர்களே..! கூடிய விரைவில் வைபரில் உரையாடிக் கொள்வோமா..?

Tuesday, March 23, 2010

தேடலின் குறுக்கே தெரிவது

அந்தப் பாலைமணல் வெளியில் பரதேசியாய் திரிந்தான் மஜ்னு. சுட்டெரிக்கும் சூரியனும் நள்ளிரவின் கடுங்குளிரும், புழுதிக்காற்றும் புதைமணலும் அவனுக்கு ஒரு பொருட்டாகவேயில்லை. தேடுகிறான் தேடுகிறான் தன் தெய்வக்காதலின் தேவதையை.. லைலாவை.

ஒரு பொழுதில் ஒரு சிறு நிழலைக் கடக்கையில் 'நில்லடா..'என்றொரு குரல் கேட்டு நின்றான் திரும்பினான். கண்டான் ஒரு கண்சிவந்த ஞாநியை.

'இறைவனைத் தேடி இதுகாறும் தவமிருந்தேன்..பாவிமகன்..பாதையில் குறுக்கிட்டு பாழாக்கினாய் என் தவத்தை..'

மருன்டான் அந்த மஜ்னு..மாலையிட்டன கண்கள் நீர்த்துளியில்..உதிர்த்தான் வார்த்தைகள் ஒன்றிரண்டாய்..

'இவ்வுலகின் என்னுயிரை எங்கெங்கும் தேடுகிறேன்..என் விழியில் உம் இருப்பை காணவில்லை இதுவரை நான்.. ஆனால் இறைவனையே தேடுகிறீர்.. உம் விழியில் எப்படி நான் உள்வந்தேன்..விந்தையிது...'

அழியப்போகும் இவ்வுலகில் ஒரு பெண்ணைத்தேடிய மஜ்னுவின் கண்கள் வேறெதையும் காணவில்லை. ஆனால் அழிவில்லா இறைவனைத் அறியத்தேடும் ஆன்மீகவாதியின் கண்களுக்கு இவ்வுலகின் இயக்கங்கள் சலனங்களே.

Labels: